பாக்டீரியா இலை வரி நோய் — பாக்கு
Xanthomonas vasicola pv. arecae
அறிகுறிகள்
இலைப்பரப்பில் அடர் பச்சை நிறத்தில், நீர்கோர்த்த புள்ளிகள் தோன்றும். இந்தத் தழும்புகள் ஒளி ஊடுருவக்கூடிய, குறுகிய நேர்கோடுகளாகக் காணப்படலாம். பாதிக்கப்பட்ட இந்தக் கோடுகள் சுற்றியுள்ள ஆரோக்கியமான இலைத் திசுக்களிலிருந்து தெளிவாக வேறுபட்டுத் தெரியும். இலையின் அடிப்புறத்தில் இதற்கு நேர் கீழே பாலேடு போன்ற வெண்ணிறக் கசிவு தோன்றும். இந்தக் கசிவு ஈரமாக இருக்கும்போது பிசுபிசுப்பாக இருக்கும். இக்கசிவு உலரும்போது மெழுகு போன்று மாறும். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இலைத் திசுக்கள் கருக ஆரம்பிக்கும். இலையின் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் இந்தக் கருகல் பரவக்கூடும். நோய்த்தாக்குதல் தீவிரமடையும் போது, இலையின் ஒரு பகுதி கருகிவிடும். மிகக் கடுமையான சூழ்நிலைகளில், இலை முழுவதும் கருகிவிடக்கூடும். கடுமையான நோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரம் முழுவதுமாக மடிந்துவிடக்கூடும்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை