தண்டு சிதைவு நோய் — பாக்கு

Thielaviopsis paradoxa

தண்டு சிதைவு நோய்

அறிகுறிகள்

தண்டின் அடிப்பகுதியில் சிறிய, நிறமாறிய பள்ளமான தழும்புகள் தோன்றும். இந்தப் பள்ளங்கள் படிப்படியாகப் பெரிதாகும். அருகருகே உள்ள தழும்புகள் ஒன்றிணைந்து பெரிய அளவிலான பாதிப்புகளை உருவாக்கலாம். நோய் தீவிரமடையும் போது தண்டில் விரிசல்கள் ஏற்படும். உட்புற நார்த் திசுக்கள் சிதைவடைகின்றன. விரிசல்கள் வழியாகப் பழுப்பு நிறத் திரவம் (பிசின்) கசியும். இந்த அறிகுறிகள் குறிப்பாக 10 முதல் 15 வயதுடைய பாக்கு மரங்களில் அதிகமாகி காணப்படலாம். அளவுக்கதிகமான நீர் இந்நோய் தாக்குவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கருதப் படுகிறது.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை