வேர் வாடல் நோய் — தென்னை

Phytoplasma

🌿

அறிகுறிகள்

நோயின் ஆரம்பக்கட்ட முக்கிய அறிகுறி சிற்றிலைகள் தளர்ந்து காணப்படுவதாகும்: அவை கடினத்தன்மையை இழந்து தொங்கியபடி காணப்படும். சிற்றிலைகள் அசாதாரணமாக வளைந்து, பெரும்பாலும் உட்புறமாக வளைந்து, விலா எலும்பு போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த அசாதாரண சிற்றிலை அமைப்பினால், பாதிக்கப்பட்ட தென்னை ஓலைகள் கோப்பை போன்ற அல்லது உட்புறமாக வளைந்த வடிவத்தைப் பெறலாம். மஞ்சள் நிறமாக மாறுவது பொதுவாக சிற்றிலைகளின் நுனிகளில் தொடங்கி, அதன் மையப்பகுதியை நோக்கிப் பரவுகிறது. அதைத் தொடர்ந்து சிற்றிலைத் திசுக்கள் அழுகி, பழுப்பு நிற அல்லது காய்ந்த திட்டுக்கள் உருவாகக்கூடும். வேர் அமைப்பு படிப்படியாக சீரழிகிறது; வேர்கள் அழுகுவதால் மரத்தின் வீரியம் குறைகிறது. மரத்தண்டின் நுனிப்பகுதி சிறுத்துப்போகலாம், புதிதாக உருவாகும் ஓலைகள் வழக்கத்தை விடச் சிறியதாக இருக்கலாம். பூப்பது (பாளை வருவது) தாமதமாகலாம், மேலும் பாளைகள் மற்றும் காய்களின் எண்ணிக்கை குறையலாம். குரும்பைகள் மற்றும் முதிர்ச்சியடையாத காய்கள் அசாதாரணமாக உதிரக்கூடும். மரம் படிப்படியாக வலுவிழந்து மகசூல் குறையும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை