செதில் பூச்சி — தென்னை
Aspidiotus destructor
🌿
அறிகுறிகள்
செதில் பூச்சிகள் இலைகளின் அடிப்பகுதியில் பெருமளவில் தங்கி சாற்றை உறிஞ்சும். ஆரம்ப நிலையில், பூச்சிகள் தங்கியுள்ள இடத்திற்கு நேர் மேலே, இலையின் மேற்புறத்தில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். தாக்குதல் தீவிரமடையும் போது, இந்தப் புள்ளிகள் ஒன்றிணைந்து இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி, பின் காய்ந்து சருகாகிவிடும். அதிகப்படியான தாக்குதலின் போது, இவை பிஞ்சுக் காய்கள் மற்றும் பாளைகளின் மேல் படர்ந்து அடர்த்தியாகக் காணப்படும். இதனால் காய்கள் சிறுத்துப்போவதுடன், முன்கூட்டியே குறும்பைகள் உதிர்ந்து, மரத்தின் தலைப்பகுதி முழுவதும் தீயில் கருகியது போல் தோன்றும்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை