கரித்தண்டு அழுகல் நோய் — மக்காச் சோளம்

Macrophomina phaseolina

கரித்தண்டு அழுகல் நோய்

அறிகுறிகள்

பெரும்பாலும் பூக்கும் பருவத்திற்குப் பிறகு, மேல் இலைகள் வழக்கத்திற்கு மாறாகக் காயத் தொடங்கும். தண்டின் கீழ்ப்பகுதியில் உள்ள கணுவிடைப் பகுதிகள் உட்புறத்தில் கருமை நிறமாக மாறும். தண்டின் உட்புறச் சதைப்பகுதி நார் நாராகப் பிரிந்து, நீர் மற்றும் சாறு கடத்தும் திசுக்கள் அடர் கருமையாக மாறும். தண்டின் உட்புறத் திசுக்களில் எண்ணற்ற சிறிய கருப்பு நிறப் பூஞ்சை வித்துகள் காணப்படலாம். தண்டுகள் பலவீனமடைந்து, அடிப்பகுதியில் அல்லது வேரும் தண்டும் இணையும் பகுதியில் முறிந்து விடக்கூடும். நோய்த்தொற்றுக்கு ஆளான மக்காச்சோள மணிகளும் கருமை நிறமாக மாறக்கூடும்.

பரிந்துரைகள்

கார்பாக்சின் 37.5% + திரம் 37.5% (WS)

பாதிப்புள்ள பகுதிகளில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்

கார்பெண்டாசிம் 12% + மான்கோசெப் 63% (WP)

மருந்தை நீரில் கரைத்து பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள செடிகளின் வேர் நனையுமாறு மண்ணில் ஊற்ற வேண்டும்.

டெபுகோனசோல் 50% + ட்ரைபிளாக்ஸிஸ்ட்ரோபின் 25% (WG)

மருந்தை நீரில் கரைத்து பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள செடிகளின் வேர் நனையுமாறு மண்ணில் ஊற்ற வேண்டும்.