கதிர் கரிப்பூட்டை நோய் — மக்காச் சோளம்
Sporisorium reilianum
அறிகுறிகள்
செடியின் ஆரம்ப வளர்ச்சிக் கட்டத்தில் பெரும்பாலும் நோயின் அறிகுறிகள் எதுவும் தென்படாது. செடியில் ஆண் பூங்கொத்துகள் மற்றும் கதிர்கள் தோன்றும் பருவத்தில் நோயின் அறிகுறிகள் தெளிவாகத் தெரியத் தொடங்கும். ஆண் பூங்கொத்துகள் உருமாறி, வழக்கத்திற்கு மாறாகப் பெரிதாகிவிடும். ஆண் பூக்களின் அமைப்புகளுக்குப் பதிலாக கருப்பு நிறப் பூஞ்சை வித்துக் குவியல்கள் தோன்றும். இயல்பான மக்காச்சோளக் கதிருக்குப் பதிலாக முழுவதும் கருப்பு நிறப் பூஞ்சை வித்துக் குவியல்களாக உருவாகக்கூடும். நோய்த்தொற்றுக்கு ஆளான கதிரின் உட்புறத்தில் உள்ள நீர் மற்றும் உணவு கடத்தும் குழாய்கள் நார் நாராகப் பிரிந்து, கம்பி அல்லது நூல் போன்ற அமைப்பில் வெளியே தெரியும்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை