பித்தியம் தண்டு அழுகல் நோய் — மக்காச் சோளம்
Pythium aphanidermatum
அறிகுறிகள்
தண்டின் அடிப்பகுதியில் உள்ள கணுவிடைப் பகுதிகள் மென்மையாகி, நீர் கோர்த்து, கருமை நிறமாக மாறும். நோய்த்தொற்றுக்கு ஆளான செடிகள் கீழே சாய்வதற்கு முன்பு, அவற்றின் தண்டுகள் முறுக்கிக் கொள்ளக்கூடும். தண்டுகள் தமது உறுதித்தன்மையை இழந்து, செடிகள் முழுமையாக சரிந்து விழலாம். செடியின் நீர் மற்றும் உணவு கடத்தும் குழாய்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் வரை செடிகள் வாடாமல் உயிருடன் இருக்கும். இந்நோய் செடிகள் பூக்கும் பருவத்திற்கு முன்னதாகவே செடிகளைப் பாதிக்கும் தன்மை கொண்டது.
பரிந்துரைகள்
மெட்டலாக்சில் 8% + மேன்கோசெப் 64%
(WP)
பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றிவிட்டு, சுற்றியுள்ள ஆரோக்கியமான செடிகளின் அடிப்பகுதியை (கீழ்மட்டத்திலுள்ள 1–2 கணு இடைவெளிகள் மற்றும் வேர் பகுதி) நன்கு நனையுமாறு ஊற்றவும்.