டர்சிகம் இலை கருகல் நோய் — மக்காச் சோளம்
Exserohilum turcicum
அறிகுறிகள்
ஆரம்பகால அறிகுறிகள் இலைகளில் சிறிய, நீள்வட்ட வடிவிலான, நீர் கோர்த்த புள்ளிகளாகத் தோன்றும். இந்தப் புள்ளிகள் விரிவடைந்து நீண்ட, சுருள் வடிவத் தழும்புகளாக மாறும். முதிர்ந்த தழும்புகள் சாம்பல்-பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறம் வரை காணப்படும், மேலும் அவற்றின் மையப்பகுதி காய்ந்து கருகி இருக்கும். பொதுவாக நோய்ப் புள்ளிகள் முதலில் கீழ் இலைகளில் தோன்றி, செடி வளர வளர அவற்றின் எண்ணிக்கையும் அளவும் அதிகரிக்கும். அருகிலுள்ள தழும்புகள் ஒன்றிணைந்து, இலைத் திசுக்களின் பெரும்பகுதியை உலரச் செய்து, எரிந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கும். மக்காச்சோளக் கதிர் வரும் (பூக்கள் தோன்றும்) காலத்தில் ஏற்படும் தீவிர நோய்த்தொற்றால், செடியின் பச்சை இலைப் பகுதிகள் பெருமளவில் கருகி விளைச்சலைப் பாதிக்கும்.
பரிந்துரைகள்
அசோக்சிஸ்ட்ரோபின் 18.2% + டைஃபெனோகோனசோல் 11.4% w/w
(SC)
அசோக்சிஸ்ட்ரோபின் 18.2% w/w + சைப்ரோகோனசோல் 7.3% w/w
(SC)
கிரெசோக்சிம்-மீதைல் 44.3%
(SC)