சிங்க் சத்து பற்றாக்குறை — மக்காச் சோளம்

சிங்க் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

முக்கிய அறிகுறி: மைய நரம்பின் இருபுறமும் அகன்ற வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பட்டைகள் செடிகள் முளைத்த சுமார் இரண்டு வாரங்களுக்குள் இந்த அறிகுறிகள் பொதுவாகத் தோன்றும். இளம் இலைகளே முதலில் பாதிக்கப்படுகின்றன; அதே சமயம் முதிர்ந்த இலைகள் பச்சை நிறமாகவே இருக்கலாம். இலையின் அடிப்பகுதிக்கு அருகில் தொடங்கி, மைய நரம்பின் இருபுறமும் அகன்ற வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பட்டைகள் உருவாகும். மைய நரம்பு மற்றும் இலையின் வெளி ஓரங்கள் பொதுவாக பச்சை நிறமாகவே இருக்கும். இந்த பட்டைகள் இலையின் முழு நீளத்திற்கும் சீராகப் பரவாமல், இலையின் கீழ்ப்பாதியில் (அடிப்பகுதியில்) மிகவும் தெளிவாகக் காணப்படும். கணுவிடைகளின் வளர்ச்சி தடுக்கப்படுவதால், மேல் இலைகள் நெருக்கமாக அமைந்து விசிறி போன்ற தோற்றத்தை உருவாக்கும். தட்டுப்பாடு தீவிரமடையும் போது வெளிர் சாம்பல் நிற காய்ந்த (இறந்த) திசுக்கள், சோளக்கதிரில் பெண் பூ(silk) வெளிவருவதில் தாமதம் மற்றும் ஆண் பூவின் (tassel) அசாதாரண வளர்ச்சி ஆகியவை ஏற்படலாம்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை