பாக்டீரியா இலைக் கருகல் — மர வள்ளிக் கிழங்கு
Xanthomonas axonopodis
அறிகுறிகள்
இலைகளின் கீழ்ப்பரப்பில் உள்ள நரம்புகளுக்கு இடையில் சிறிய, கோண வடிவ, பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். நோய் பரவும் நிலையில் இலைகள் பழுப்பு நிறமாக மாறும். புள்ளிகள் ஒன்றிணைந்து இலைக் கருகல் உருவாகும். இலைக்காம்புகள் நேராக இருக்கும் நிலையில், கருகிய இலைகள் கீழ் நோக்கி தொங்கி விடும். தண்டுகள், இலைகள், இலைக்காம்புகளில் பழுப்பு நிறப் பிசின் உருவாகலாம்.
பரிந்துரைகள்
காசுகாமைசின் 3%
(SL)
சிறந்த நோய்க் கட்டுப்பாட்டைப் பெற காப்பர் ஆக்சி குளோரைடுடன் கலந்து தெளிக்கவும்.