பருவம்

பாசன வசதி உள்ள இடங்களில் ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். மானாவாரியில் உங்கள் இடத்தின் மழைப் பொழிவு விவரங்களைப் பொறுத்து நடவு செய்யவும்.

நில தயாரிப்பு

கல்டிவேட்டரைக் கொண்டு வயலை இரண்டு முறை ஆழமாக உழவும். தேவைப்பட்டால், இறுதியாக ரோட்டவேட்டரைப் பயன்படுத்தி மண்ணை நன்கு பொலபொலப்பான நிலைக்குக் கொண்டு வரவும்.இறுதி உழவுக்கு முன், பரிந்துரைக்கப்பட்ட அடி உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளுடன் சேர்த்து, ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தை இடவும்.

விதை நேர்த்தி

ஆரோக்கியமான, மொசைக் நோய் தாக்காத தண்டுகளின் நடுப்பகுதியிலிருந்து 8-10 கணுக்கள் கொண்ட 15 செ.மீ நீளமுள்ள விதைக் கரணைகளை வெட்டவும். தண்டுப் பகுதியில் சேதம் ஏற்படாமல் கவனமாக வெட்டவும். கிழங்கு அழுகலைத் தடுக்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் 50% + செதில் பூச்சிகள் மற்றும் மாவுப் பூச்சிகளை அழிக்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற அளவில் தயோமெத்தாக்ஸம் 30% பூச்சிக் கொல்லியைக் கலந்து விதைக் கரணைகளை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

விதைப்பு

பார்களின் பக்கவாட்டில், விதைக் கரணைகள் மேல்நோக்கி இருக்குமாறு நடவும். ஒரு ஹெக்டேருக்கு சுமார் 12,500 கணுக்கள் தேவைப்படும். பயிர் இடைவெளி 90 செ.மீ x 60 செ.மீ இருக்குமாறு நடவு செய்யவும்.