இலைப் புள்ளி நோய் — மர வள்ளிக் கிழங்கு
Cercospora henningsii, Cercospora vicosae
அறிகுறிகள்
இலைகளில் சிறிய பழுப்பு நிறத் புள்ளிகள் தோன்றும். இவற்றைச் சுற்றி மஞ்சள் நிற வளையம் காணப்படும். இலைப்புள்ளிகளின் அளவு, வடிவம், நிறம் மற்றும் தோற்றம் ஆகியவை நோயை உண்டாக்கும் உயிரினங்களைப் பொறுத்து மாறுபடும். இலைகளின் இரு பக்கங்களிலும் இப்புள்ளிகள் தோன்றுகின்றன. இலையின் மேல்புறத்தில் அடர் நிற விளிம்புகளுடன் கூடிய பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். இலையின் அடிப்பகுதியில் சாம்பல் நிற மையப்பகுதியையும் தெளிவற்ற விளிம்புகளையும் கொண்ட புள்ளிகள் தோன்றுகின்றன. சில சமயங்களில் மேல்புறத்தில் வெண்மையான புள்ளிகளும் காணப்படலாம். நோய்த்தொற்றுக்குள்ளான இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடுகின்றன.
பரிந்துரைகள்
டெபுகோனசோல் 38.39% w/w
(SC)
அசோக்சிஸ்ட்ரோபின் 8.3% + மான்கோசெப் 66.7%
(WG)
மெட்டிரம் 70%
(WG)