பழ அழுகல் நோய் — தக்காளி

Colletotrichum spp.

பழ அழுகல் நோய்

அறிகுறிகள்

அறிகுறிகள் முக்கியமாக பழுத்த பழங்களில் தோன்றும்; பெரும்பாலும் பழங்கள் மண் அல்லது பயிர் கழிவுகளைத் தொடும் இடங்களில் இவை காணப்படும். பழத்தின் மீது சிறிய, வட்டமான, குழிவான பள்ளங்கள் உருவாகி, 12 மி.மீ விட்டம் வரை பெரியதாக மாறக்கூடும். பாதிக்கப்பட்ட இடம் பொதுவாக பழுப்பு நிறமாக மாறும். மேலும் அதில் சுருள் வட்ட வடிவில் அமைந்த பல கருப்பு நிற பூஞ்சை வித்துகள் (fruiting bodies) காணப்படும். பாதிப்படைந்த பகுதியின் மேற்பரப்பில் இளஞ்சிவப்பு/ஆரஞ்சு) நிறத்திலான பூஞ்சை வித்துக்கள் (spores) தோன்றக்கூடும். இந்த வட்ட வடிவ பாதிப்புகள், ஒன்றோடொன்று இணைந்து அதிகமான பகுதிகளை பாதிக்கக்கூடும். அழுகிய இடங்களில் வெடிப்புகள் ஏற்படலாம், இதனால் மற்ற நுண்கிருமிகள் உள்ளே நுழைந்து பழத்தை மேலும் அழுகச் செய்யும். பச்சையான காய்கள் பாதிக்கப்படும்போது அவை பழுக்கும் வரை எந்தவித அறிகுறிகளையும் வெளியில் காட்டாமல் இருக்கலாம்; இது மறைமுகத் தொற்று (latent infection) என அழைக்கப்படுகிறது. இலைகளில் அறிகுறிகள் தோன்றுவது அரிது; அவ்வாறு தோன்றினால், அவை மஞ்சள் நிற வளையத்தால் சூழப்பட்ட சிறிய, வட்டமான, பழுப்பு நிற புள்ளிகளாகக் காணப்படும். பாதிக்கப்பட்ட வேர்களின் உட்புற திசுக்கள் பழுப்பு நிறமாகி அழுகிக் காணப்படும், மேலும் மேற்பரப்பிற்கு அடியில் பல சிறிய கருப்பு நிற பூஞ்சை அமைப்புகள் இருக்கும். வேர் வளர்ச்சி குறைவதால், செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, செடியின் வளர்ச்சியும் தடைபடும் (stunting).

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை