பாக்டீரியா இலைப்புள்ளி நோய் — தக்காளி
Xanthomonas spp.
அறிகுறிகள்
இலைகளில் பொதுவாக 3 மி.மீ.க்கும் குறைவான விட்டமுடைய, சிறிய, கருமையான, நீர் தேங்கியதுபோன்ற வட்ட வடிவப் புள்ளிகள் தோன்றும். ஆரம்பத்தில் இலைகளின் மேற்பரப்பில் எண்ணெய் பசையுடன் காணப்படும் இப்புள்ளிகள், பின்னர் பழுப்பு-கருப்பு நிறமாக மாறி, கோண வடிவத்தைப் பெறும். அதிக எண்ணிக்கையிலான புள்ளிகள் ஒன்றிணைந்து, இலைகளில் பெரிய அளவிலான கருகிய பகுதிகளை உருவாக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும் அல்லது செடியிலேயே உலர்ந்து காணப்படும். இளம் இலைகள் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் அதிகம். பாதிக்கப்பட்ட செடி/நாற்றுகளில் இலைப்புள்ளிகள் படிப்படியாக அதிகரித்து, பின்னர் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். கடுமையான தாக்குதலில் இலைகள் உதிர்ந்துவிடும். தண்டுகள் மற்றும் இலைக்காம்புகளில் தோன்றும் புள்ளிகள், இலைப்புள்ளிகளைப் போன்றே காணப்படும். ஆனால், அவை நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். முதிராத பழங்களில், நீர் தேங்கியதுபோன்ற ஓரங்களுடன் கூடிய சிறிய, சற்றே உயர்ந்த கருப்புப் புள்ளிகள் தோன்றும். பழங்களில் உள்ள புள்ளிகள் பெரிதாகி, பழுப்பு நிறமாகவும், சற்றே பள்ளமாகவும், சொறி போன்ற கரடுமுரடான தோற்றத்துடனும் மாறும். சில நேரங்களில் புள்ளிகளைச் சுற்றி ஒளிவட்டம் போன்ற பகுதியும் காணப்படும். பழங்களில் ஏற்படும் புள்ளிகள் மேலோட்டமானவை; பொதுவாக அவை பழ அழுகலை ஏற்படுத்துவதில்லை. நன்கு பழுத்த பழங்களில் இந்நோயின் தாக்குதல் அரிதாகவே காணப்படும்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை