பாக்டீரியா வாடல் நோய் — தக்காளி

Ralstonia solanacearum

பாக்டீரியா வாடல் நோய்

அறிகுறிகள்

வெப்பமான பகல் நேரங்களில் முதலில் இளம் இலைகளில் வாடுதல் அறிகுறிகள் தோன்றும். மாலையில் வெப்பநிலை குறையும்போது, பாதிக்கப்பட்ட செடிகள் தற்காலிகமாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். சில நாட்களுக்குள் செடிகள் திடீரென வாடி, நிரந்தரமாக வாடிய நிலையிலேயே காணப்படலாம். நோய் வளர்ச்சிக்குச் சாதகமற்ற சூழ்நிலைகளில், செடிகளின் வளர்ச்சி குன்றி, கீழ் இலைகள் மஞ்சளாக மாறிய பின்னர் வாடுதல் ஏற்படலாம். வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதியில் உள்ள வாஸ்குலார் திசுக்கள் (நீர்க்கடத்தும் திசுக்கள்) பழுப்பு நிறமாக மாறும். இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வேர்கள் அழுகக்கூடும். பாதிக்கப்பட்ட தண்டை வெட்டி, சுத்தமான நீர் உள்ள பாத்திரத்தில் வைத்தால், வெட்டப்பட்ட பகுதியிலிருந்து மஞ்சள் அல்லது சாம்பல் நிற பாக்டீரியா கசிவு வெளியேறும். கடுமையான பாதிப்பின்போது, இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்போது செடிகள் விரைவாகவும் முழுமையாகவும் வாடிவிடும்.

பரிந்துரைகள்

காசுகாமைசின் 3% (SL)

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட முறைகள் எதுவும் இல்லை. காசுகாமைசின் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றைத் தண்ணீரில் கரைத்து பாதிக்கப் பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள செடிகளின் அடித்தண்டு மற்றும் வேர்ப் பகுதி நனையுமாறு ஊற்றுவதன் மூலம், நோய் மேலும் பரவுவதைக் குறைக்கலாம். நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால், சில பருவங்களுக்கு முறையான பயிர் சுழற்சியைப் பின்பற்ற வேண்டும்.