கால்சியம் சத்து குறைபாடு (பூ முனை அழுகல் ) — தக்காளி
அறிகுறிகள்
அறிகுறிகள் பொதுவாக முதல் காய்க்கொத்துகளில் காணப்படும். இருப்பினும், பயிரின் பல்வேறு வளர்ச்சி நிலைகளிலும் இக்குறைபாடு ஏற்படலாம். குறைந்தது மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சியடைந்த இளம் காய்களின் பூத்தளப் பகுதியில் (அடிப் பகுதியில்) வெளிர் பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றும். இத்திட்டுகள் படிப்படியாகக் கருமை நிறமாக மாறி, பள்ளமாகவும், கருப்பு நிறத்திலும், தோல் போன்ற கடினத் தன்மையுடனும் காணப்படும். பாதிக்கப்பட்ட திசுக்கள் உலர்ந்தும் உறுதியாகவும் இருக்கும். பாதிப்பு, காயின் பாதி அளவு வரை பரவக்கூடும். காயை வெட்டிப் பார்க்கும்போது, அதன் உட்பகுதியில் கருமை நிறமடைந்திருப்பது தெரியும். இறந்த திசுக்களில் இரண்டாம் நிலை நுண்ணுயிரிகள் தொற்றுவதால், காய்கள் மென்மையாகி அழுகும் நிலை ஏற்படலாம்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை