பின் இலை கருகல் நோய் — தக்காளி
Phytophthora infestans
அறிகுறிகள்
செடியில் மண்ணுக்கு மேலுள்ள அனைத்துப் பகுதிகளும் இந்நோயால் பாதிக்கப்படலாம். இலைகளில் ஆரம்பத்தில் சுமார் 2–10 மி.மீ. அளவுள்ள, சிறியது முதல் நடுத்தர அளவு வரையிலான ஒழுங்கற்ற வடிவிலான வெளிர் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். சில சமயங்களில் இவற்றில் ஊதா நிறச் சாயலும் காணப்படும். நோய்ப் புள்ளிகளின் ஓரங்கள் வெளிர் பச்சை நிறமாகவோ அல்லது நீரில் நனைந்தது போன்ற தோற்றத்துடனோ காணப்படும். நோய்ப் புள்ளிகள் பெரிதாகி ஒன்றோடொன்று இணைந்து வேகமாகப் பரவும். இதனால் முழு இலைகளும் கருகியது போல் இறக்கக் கூடும்.. ஈரப்பதம் அதிகமாக உள்ள சூழலில், இலையின் அடிப்பகுதியில் நோய்ப் புள்ளிகளின் ஓரங்களில் வெள்ளை நிறப் பூஞ்சை வளர்ச்சி பஞ்சு போன்ற தோற்றத்தில் காணப்படும். சாதகமான தட்பவெப்ப நிலைகளில் (தொடர் மழை அல்லது மேகமூட்டம், அதிக பனி, காற்றில் அதிக ஈரப் பதம்) நோய் மிக வேகமாகப் பரவி, சுமார் இரண்டு வாரங்களுக்குள் வயல் முழுவதும் கடுமையான இலை உதிர்வை ஏற்படுத்தக்கூடும். வறண்ட காலநிலையில், பாதிக்கப்பட்ட தாவரங்களின் இலைகள் கருகியதுபோன்ற தோற்றத்துடன் சுருங்கி வாடும். இத்தகைய சூழலில் நோயின் பரவல் வேகம் குறையும் அல்லது நோய் பரவுவது நின்றுவிடும். தண்டு மற்றும் இலைக்காம்புகளில் கரும்பழுப்பு நிறத்திலான, நீரில் நனைந்ததுபோன்ற நோய்க் கருகல் தோன்றும். இவற்றின் மீதும் பூஞ்சை வளர்ச்சி காணப்படலாம். தண்டில் ஏற்படும் நோய்க் கருகல் தாவரத்தின் முழுப் பகுதிகளுக்கும் பரவி, செடி முழுவதும் இறப்பதற்குக் காரணமாகலாம். காய்கள் உருவாகும் எந்த நிலையிலும் நோய்த்தொற்று ஏற்படலாம். பொதுவாக, காயின் காம்பு இணையும் பகுதியிலிருந்து நோய் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட காய்களில் ஆலிவ் பழுப்பு நிறத்தில், கரடுமுரடான தோல் போன்ற அமைப்புடைய புள்ளிகள் தோன்றும். இவை பரவி, முழுக் காயையும் பாதிக்கக்கூடும். நோய்த்தொற்று ஏற்பட்ட காய்கள் ஆரம்பத்தில் உறுதியாகவே இருக்கும். அவற்றின் உட்புறத் திசுக்களில் சீரற்ற நிறமாற்றம் காணப்படும். அதிக ஈரப்பதம் உள்ள சூழலில், பாதிக்கப்பட்ட காய்களின் மேற்பரப்பில் வெள்ளை நிறப் பூஞ்சை வளர்ச்சி தோன்றலாம். நோய்த் தழும்புகளில், இரண்டாம் நிலை நுண்ணுயிரிகள் தாக்குவதால், காய்கள் மென்மையாகி அழுகக்கூடும்.
பரிந்துரைகள்
ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படும் போது