சாம்பல் நோய் — தக்காளி
Leveillula taurica, Oidium neolycopersici
அறிகுறிகள்
அறிகுறிகள் பொதுவாக கீழ்ப்பகுதியில் உள்ள முதிர்ந்த இலைகளில் தோன்றி, படிப்படியாக மேல்நோக்கிப் பரவுகின்றன. இலைகளின் மேற்பரப்பில் மஞ்சள் நிறத் திட்டுகள் அல்லது புள்ளிகள் தோன்றும். நோய்க்காரணியான பூஞ்சையின் வகையைப் பொறுத்து, இலைகளின் கீழ்ப்புறத்திலோ அல்லது மேற்புறத்திலோ (Oidium neolycopersici) வெள்ளை நிற மாவு போன்ற பூஞ்சை வளர்ச்சி காணப்படும் . பழைய பூஞ்சை வளர்ச்சிகள் காலப்போக்கில் அழுக்குப் படிந்த வெள்ளை நிறமாக மாறும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாகி, பின்னர் பழுப்பு நிறமாக மாறி, இறுதியில் சுருங்கி உலர்ந்து விடும். நோய்த்தாக்கம் தீவிரமடையும்போது இலைகள் அதிக அளவில் உதிரும். இதனால் மகசூல் குறைவதுடன், பழங்கள் நேரடி சூரிய ஒளியால் பாதிக்கப்படும் அபாயமும் அதிகரிக்கிறது. பழங்களிலும் வேர்களிலும் வெளிப்படையான நோய் அறிகுறிகள் காணப்படுவதில்லை.