மொசைக் வைரஸ் நோய் — தக்காளி
Tomato mosaic virus
அறிகுறிகள்
வளர்ச்சியின் எந்த நிலையிலும் நோய் அறிகுறிகள் தோன்றலாம். செடியின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்படலாம். இலைகளில் பொதுவாக வெளிர் பச்சை அல்லது அடர் பச்சை நிறத் திட்டுகள் அல்லது மொசைக் போன்ற நிறமாற்றங்கள் காணப்படும். இளம் இலைகள் உருமாற்றம் அடையும். செடியின் வளர்ச்சிக் குன்றுதல் நோய்த்தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலைகளில், உயர்ந்து காணப்படும் அடர் பச்சை நிறப் பகுதிகளுடன், பன்னீர் இலை (Fern) போன்ற தனித்துவமான தோற்றம் உருவாகலாம். காய்கள் உருவாகும் அளவு பெருமளவில் குறையலாம். பச்சை அல்லது பழுத்த பழங்களில் சதைப்பற்றுள்ள பழச்சுவரின் உட்பகுதி பழுப்பு நிறமாக மாறுதல், மஞ்சள் நிறத் திட்டுகள் மற்றும் இறந்த திசுக்களால் உருவாகும் புள்ளிகள் காணப்படலாம். வைரஸ் தாக்கத்தின் அளவைப் பொறுத்து, இலைகள், இலைக்காம்புகள், தண்டுகள் அல்லது பழங்களில் மஞ்சள் நிறத் திட்டுகள் அல்லது அடர் நிறத்தில் திசுக்கள் இறந்துபோன கோடுகள் தோன்றலாம். ரகம், நோய்த்தாக்குதலின்போது செடியின் வயது, சுற்றுச்சூழல் நிலைகள் மற்றும் வைரஸ் வகை ஆகியவற்றைப் பொறுத்து நோய் அறிகுறிகள் மாறுபடும். உருளைக்கிழங்கு எக்ஸ் வைரஸுடன் இணைந்து இரட்டை வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால், இரட்டை வைரஸ் கோடுகள் எனப்படும் கடுமையான அறிகுறிகள் தோன்றலாம்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை