மஞ்சள் இலை சுருள் வைரஸ் நோய் — தக்காளி
Tomato yellow leaf curl virus
அறிகுறிகள்
செடிகளின் வளர்ச்சி கடுமையாகக் குன்றி, கிளைகள் செங்குத்தாக அல்லது மேல்நோக்கி வளரும். இலைகள் அளவில் சிறுத்து, சுருக்கமடைந்து, உருமாற்றம் அடையும். இலைகள் மேல்நோக்கிச் சுருண்டு காணப்படும். இலைகளின் ஓரங்களிலும், நரம்புகளுக்கு இடையிலும் மஞ்சள் நிறமாதல் தெளிவாகக் காணப்படும். பூக்கள் வாடி உதிரலாம். நோய்த்தாக்குதலுக்குப் பிறகு காய்கள் உருவாகும் அளவு பெருமளவில் குறையும். பூக்கும் பருவத்திற்கு முன்பே நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும் செடிகளில் மகசூல் மிகவும் குறைவாக இருக்கும். நோய்த்தாக்குதலுக்குப் பிறகும் உருவாகும் பழங்களின் வெளித்தோற்றத்தில் எந்தப் பாதிப்பும் காணப்படாது.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை