தழைச்சத்து பற்றாக்குறை

தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

முக்கிய அறிகுறி: முதிர்ந்த இலைகளில் மஞ்சள் நிற 'V' வடிவ தோற்றம் செடிகளின் வளர்ச்சி குன்றி, மெலிந்த தண்டு மற்றும் குறைந்த இலை வளர்ச்சியுடன் காணப்படும். ஆரம்பத்தில் முழு செடியும் வெளிர் பச்சை நிறத்தில் தோன்றும். முதிர்ந்த, கீழ்ப்புற இலைகளின் நுனியில் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கி, மைய நரம்பின் வழியாக இலையின் அடிப்பகுதியை நோக்கி பரவும். இந்த மஞ்சள் நிறப் பகுதி தலைகீழ் 'V' வடிவ அமைப்பை உருவாக்குகிறது, இதன் அகன்ற பகுதி இலையின் அடிப்பகுதியை நோக்கி விரிவடையும். பற்றாக்குறை அதிகரிக்கும் போது, பாதிக்கப்பட்ட திசுக்கள் வெளிர் பழுப்பு நிறமாக மாறி, காய்ந்து மடிந்துவிடும். முதிர்ந்த இலைகள் காய்ந்து போகலாம், நடுத்தர இலைகள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறும், அதே நேரத்தில் இளம் இலைகள் ஓரளவு பச்சை நிறத்திலேயே இருக்கும். பற்றாக்குறை தொடரும் நிலையில், சோளக்கதிர்கள் சிறியதாக மாறும்; கதிர்களில் குறைவான மணி பிடிப்பு காணப்படும்.

பரிந்துரைகள் (1)
யூரியா

பரிந்துரைக்கப்பட்ட அளவு யூரியாவை மண்ணில் இடவும். மேலும், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது நானோ யூரியாவை சேர்க்கலாம். ஆனால், பூச்சிக்கொல்லி மருந்துடன் நானோ யூரியாவின் இணக்கத்தன்மையை (Compatibility) உறுதி செய்த பின்னரே தெளிக்க வேண்டும்.

மணிச்சத்து பற்றாக்குறை

மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

முக்கிய அறிகுறி: ஊதா அல்லது சிவப்பு நிற ஓரங்களுடன் கூடிய அடர் பச்சை நிற இலைகள் செடிகள் மெதுவாக வளர்ந்து குட்டையாகவும், மெலிந்தும் காணப்படும். இலைகள் வழக்கத்திற்கு மாறாக அடர் பச்சை அல்லது நீல-பச்சை நிறத்தில் தோன்றலாம். முதலில் முதிர்ந்த இலைகளின் நுனிகளிலும் ஓரங்களிலும் ஊதா அல்லது செம்பழுப்பு நிற மாற்றம் ஏற்படுகிறது. இந்த ஊதா நிறம் இலைகளின் ஓரங்கள் வழியாக அடிப்பகுதியை நோக்கிப் பரவலாம். தட்டுப்பாடு தீவிரமடையும் போது, இலையின் பெரும்பகுதி சிவப்பு கலந்த ஊதா அல்லது பழுப்பு நிறமாக மாறும். பாதிக்கப்பட்ட இலைகளின் நுனிகளிலும் ஓரங்களிலும் பழுப்பு நிற, காய்ந்த (இறந்த) திசுக்கள் உருவாகலாம். செடிகள் தாமதமாக முதிர்ச்சியடையும்; மேலும் சரியாக வளர்ச்சி பெறாத சிறிய சோளக்கதிர்களே அறுவடைக்கு வரும்.

பரிந்துரைகள் (2)
டி ஏ பி

சொட்டு நீர் பாசனத்திற்கு 12:61:0 (மோனோ அம்மோனியம் பாஸ்பேட்) கரைத்து விடவும்.

20:20:0:13 காம்ப்ளெக்ஸ்

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் தென்பட்டால், மோனோ அம்மோனியம் பாஸ்பேட் அல்லது நானோ டிஏபி-ஐ தெளிக்கவும். இணக்கத்தன்மையைப் தன்மையைப் பொறுத்து, இதைத் தேவையான பூச்சிக்கொல்லி அல்லது பூஞ்சைக்கொல்லியுடன் கலக்கலாம். களைக்கொல்லிகளுடன் கலப்பதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

சாம்பல் சத்து பற்றாக்குறை

சாம்பல் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

முக்கிய அறிகுறி: முதிர்ந்த இலைகளின் ஓரங்களில் மஞ்சள் நிறம் மற்றும் கருகிய நிலை செடிகளின் வளர்ச்சி குன்றி, குறுகிய கணுவிடைகள் மற்றும் மெலிந்த தண்டுடன் காணப்படும். அறிகுறிகள் முதலில் முதிர்ந்த, கீழ்ப்புற இலைகளில் தோன்றும்; அதே சமயம் ஆரம்பத்தில் இளம் இலைகள் பெரும்பாலும் பச்சை நிறமாகவே இருக்கும். இலையின் நுனியில் மஞ்சள் நிறம் தோன்றத் தொடங்கி, இரு ஓரங்களின் வழியாகவும் அடிப்பகுதியை நோக்கிப் பரவும். மஞ்சள் நிற ஓரங்கள் படிப்படியாக பழுப்பு நிறமாக மாறி, காய்ந்து கருகிவிடும். பாதிக்கப்பட்ட இலைகளின் ஓரங்கள் கருகி மடிந்தாலும், மைய நரம்பு மற்றும் பெரும்பாலான உட்புறத் திசுக்கள் பச்சை நிறமாகவே இருக்கும். தட்டுப்பாடு தீவிரமடையும் போது, தண்டின் கீழ்ப்பகுதி மற்றும் இலை உறைகளில் சிவப்பு நிறக் கோடுகள் தோன்றலாம். சோளக்கதிர்கள் சிறியதாகவும் கூர்மையாகவும் மாறும்; குறிப்பாக கதிரின் நுனிப்பகுதியில் மணி பிடிப்பு இல்லாமல் காணப்படும்.

பரிந்துரைகள் (1)
மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

சொட்டு நீர் பாசனத்திற்கு 0:0:50 (பொட்டாசியம் சல்பேட்) தேவையான தண்ணீருடன் கலந்து விடவும். கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு அறிகுறிகள் தென்பட்டால், கூடுதலாக 13:0:45 உரத்தை இலை வழித் தெளிப்பாகப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், படைப்புழு / தண்டு துளைப்பான் கட்டுப்படுத்தத் தேவையான பூச்சிக்கொல்லியையும் சேர்த்து தெளிக்கலாம் (கலப்பதற்கு முன் உரத்துடன் பூச்சிக் கொல்லியின் இணக்கத் தன்மையைத் தெரிந்து கொள்ளவும்).

சிங்க் சத்து பற்றாக்குறை

சிங்க் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

முக்கிய அறிகுறி: மைய நரம்பின் இருபுறமும் அகன்ற வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பட்டைகள் செடிகள் முளைத்த சுமார் இரண்டு வாரங்களுக்குள் இந்த அறிகுறிகள் பொதுவாகத் தோன்றும். இளம் இலைகளே முதலில் பாதிக்கப்படுகின்றன; அதே சமயம் முதிர்ந்த இலைகள் பச்சை நிறமாகவே இருக்கலாம். இலையின் அடிப்பகுதிக்கு அருகில் தொடங்கி, மைய நரம்பின் இருபுறமும் அகன்ற வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பட்டைகள் உருவாகும். மைய நரம்பு மற்றும் இலையின் வெளி ஓரங்கள் பொதுவாக பச்சை நிறமாகவே இருக்கும். இந்த பட்டைகள் இலையின் முழு நீளத்திற்கும் சீராகப் பரவாமல், இலையின் கீழ்ப்பாதியில் (அடிப்பகுதியில்) மிகவும் தெளிவாகக் காணப்படும். கணுவிடைகளின் வளர்ச்சி தடுக்கப்படுவதால், மேல் இலைகள் நெருக்கமாக அமைந்து விசிறி போன்ற தோற்றத்தை உருவாக்கும். தட்டுப்பாடு தீவிரமடையும் போது வெளிர் சாம்பல் நிற காய்ந்த (இறந்த) திசுக்கள், சோளக்கதிரில் பெண் பூ(silk) வெளிவருவதில் தாமதம் மற்றும் ஆண் பூவின் (tassel) அசாதாரண வளர்ச்சி ஆகியவை ஏற்படலாம்.

பரிந்துரைகள் (1)
சிங்க் சல்பேட்

குறைபாட்டைத் தவிர்க்க, சிங்க் சல்பேட் அடியுரமாக இடுவது சிறந்த பலனளிக்கும். கடுமையான துத்தநாகச் சத்துக் குறைபாடு காணப்பட்டால், மண் வழி உரமிடுதலுடன் கூடுதலாக சிங்க் ஈ.டி.டீ.எ (EDTA) இலைவழித் தெளிப்பு செய்யலாம்.

சல்பர் சத்து பற்றாக்குறை

சல்பர் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

முக்கிய அறிகுறி: இளம் இலைகள் சீராக வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல் செடிகளின் வளர்ச்சி குன்றி, மெலிந்து மற்றும் நலிவடைந்து காணப்படும்; மேலும் முதிர்ச்சியடைவது தாமதமாகும். அறிகுறிகள் பெரும்பாலும் மிக இளம், மேல்புற இலைகளிலேயே அதிகளவில் (தெளிவாகக்) காணப்படும். இளம் இலைகள் வெளிர் பச்சை நிறமாக மாறி, பின் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். பொதுவாக நரம்புகள் மற்றும் அவற்றுக்கு இடையேயான திசுக்கள் உட்பட முழு இலையும் சீராக மஞ்சள் நிறமாக மாறும். ஆரம்ப கட்டங்களில் முதிர்ந்த இலைகள் ஒப்பீட்டளவில் அடர் பச்சை நிறமாகவே இருக்கலாம். தட்டுப்பாடு தீவிரமடையும் போது, மிக இளம் இலைகள் மஞ்சள் நிறத்திலிருந்து கிட்டத்தட்ட வெள்ளை நிறமாக மாறலாம்; பொதுவாக பொட்டாசியம் தட்டுப்பாட்டிற்கான அறிகுறியான இலை ஓரங்கள் கருகும் நிலை இதில் ஆரம்பத்தில் காணப்படாது. ஒட்டுமொத்த செடியின் வளர்ச்சி மற்றும் விளைச்சல் குறையும். நைட்ரஜன் தட்டுப்பாட்டிலிருந்து முக்கிய வேறுபாடு: நைட்ரஜன் தட்டுப்பாடு பொதுவாக முதிர்ந்த இலைகளில் தொடங்கி, தலைகீழ் 'V' வடிவ மஞ்சள் நிற அமைப்பை உருவாக்கும். ஆனால் சல்பர் (கந்தகத்) தட்டுப்பாடு பொதுவாக இளம் இலைகளில் அதிகமாகக் காணப்படும், மேலும் இலை முழுவதும் சீரான மஞ்சள் நிறத்தை உருவாக்கும்.

பரிந்துரைகள் (1)
தனிம சல்ஃபர்

20:20:0:13 மற்றும்/அல்லது அம்மோனியம் சல்பேட் / சிங்க் சல்பேட் போன்ற சல்பர் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவது, சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க உதவும்.

சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை

சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

முக்கிய அறிகுறி: உருமாறிய, கிழிந்த மற்றும் இறுக்கமாகச் சுருண்ட இளம் இலைகள். செடிகளின் வளர்ச்சி குன்றி, குட்டையான மற்றும் தடிமனான தண்டுடன் காணப்படும். அறிகுறிகள் முதலில் புதிதாகத் தோன்றும் இளம் இலைகளில் (குருத்து இலைகளில்) காணப்படும்; அதே சமயம் முதிர்ந்த இலைகள் அடர் பச்சை நிறத்துடனும் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவும் இருக்கும். இளம் இலைகளில் வெளிர் பச்சை நிறப் பகுதிகள் உருவாகி, அதைத் தொடர்ந்து நரம்புகளுக்கு இடையே மஞ்சள் அல்லது வெள்ளை நிறப் புள்ளிகள் (அல்லது தழும்புகள்) தோன்றும். இலைப்பரப்பு உருமாறி, கிழிந்து அல்லது சிதைந்து காணப்படும். பாதிக்கப்பட்ட இளம் இலைகள் விரிவடையாமல் சுருண்ட நிலையிலேயே இருக்கலாம், மேலும் அவற்றின் நுனிகள் இயல்பாகப் பிரிவதற்குப் பதிலாக ஒன்றாக ஒட்டிக் கொள்ளக்கூடும். தட்டுப்பாடு தீவிரமடையும் போது, புதிதாகத் தோன்றும் இலைகளின் நுனிகள் பிரியாமல் ஒன்றாக இணைந்தே இருப்பதால், குருத்துப் பகுதியில் ஏணி போன்ற தோற்றம் உருவாகும். தட்டுப்பாடு மிகக் கடுமையாக இருக்கும் நிலையில், மிக இளம் இலைகள் கருகி மடிந்துவிடலாம்.

பரிந்துரைகள் (1)
கால்சியம் நைட்ரேட்

பயிரின் ஆரம்பக் கட்டங்களில் லேசான குறைபாட்டு அறிகுறிகள் தென்பட்டால், கால்சியம் ஈ.டி.டி.ஏ வைத் தெளிக்கவும். மிதமான அல்லது தீவிரமான குறைபாட்டிற்கு, மண்ணில் கால்சியம் நைட்ரேட்டை இடவும்.

மக்னீசியம் சத்து பற்றாக்குறை

மக்னீசியம் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

முக்கிய அறிகுறி: முதிர்ந்த இலைகளில் நரம்புகளுக்கு இடையே மஞ்சள் நிறக் கோடுகள் அறிகுறிகள் முதலில் முதிர்ந்த, கீழ்ப்புற இலைகளில் தொடங்கும். மைய நரம்பிற்கு இணையாக, நரம்புகளுக்கு இடையே மஞ்சள் அல்லது வெள்ளை நிறப் பட்டைகள் உருவாகும். நரம்புகள் அதைச் சுற்றியுள்ள மஞ்சள் நிறத் திசுக்களை விட பச்சை நிறமாகவே இருப்பதால், கோடுகள் போன்ற தோற்றம் உருவாகும். தட்டுப்பாடு அதிகரிக்கும் போது, மஞ்சள் நிறப் பகுதிகளில் சிவப்பு, ஊதா அல்லது துரு போன்ற பழுப்பு நிற மாற்றம் ஏற்படலாம். தட்டுப்பாடு தீவிரமடையும் போது இலைகளின் நுனிகளும் ஓரங்களும் பழுப்பு நிறமாக மாறி, காய்ந்து மடிந்துவிடலாம். முதிர்ந்த இலைகள் காலப்போக்கில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கீழ்நோக்கித் தொங்கக்கூடும். ஆரம்ப கட்டங்களில் இளம் இலைகள் பெரும்பாலும் குறைவாகவே பாதிக்கப்படும்.

பரிந்துரைகள் (1)
மெக்னீசியம் சல்பேட்

லேசான அறிகுறிகளுக்கு, மெக்னீசியம் EDTA-வை ஒன்று அல்லது இரண்டு முறை தெளிப்பதே போதுமானதாக இருக்கலாம்.

இரும்புச்சத்து பற்றாக்குறை

இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

முக்கிய அறிகுறி: இளம் இலைகளின் நரம்புகளுக்கு இடையே மஞ்சள் நிறப் பட்டைகள் அறிகுறிகள் முதலில் மிக இளம் இலைகளில் தொடங்கும்; அதே சமயம் முதிர்ந்த இலைகள் ஒப்பீட்டளவில் இயல்பாகவே இருக்கும். நரம்புகளுக்கு இடையேயான திசுக்கள் முதலில் வெளிர் பச்சை நிறமாக மாறி, பின்னர் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். நரம்புகள் தொடர்ந்து பச்சை நிறத்துடன் காணப்படுவதால், நரம்புகளுக்கு இடையே தெளிவான கோடுகள் போன்ற தோற்றம் உருவாகும். வழக்கமான துத்தநாகத் (zinc) தட்டுப்பாட்டைப் போல் இல்லாமல் , இந்த மஞ்சள் நிறப் பட்டைகள் பாதிக்கப்பட்ட இலையின் முழு நீளத்திற்கும் பரவிக் காணப்படும். தட்டுப்பாடு தீவிரமடையும் போது, பச்சை நிற நரம்புகளும் அவற்றின் நிறத்தை இழந்துவிடும். தட்டுப்பாடு மிகக் கடுமையாக இருக்கும் நிலையில், இலைகள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாகவோ அல்லது நிறம் மங்கியோ மாறிவிடும். சில சமயங்களில் இலைகள் மெலிந்து காகிதம் போன்ற தோற்றத்தைப் பெறும்.

பரிந்துரைகள் (1)
ஃபெர்ரஸ் சல்பேட்

லேசான அறிகுறிகளுக்கு ஃபெர்ரஸ் ஈடிடீஏ -ஐத் தெளிப்பதே போதுமானதாக இருக்கலாம். கடுமையான அறிகுறிகளுக்கு, மண்ணில் ஃபெர்ரஸ் சால்பேட் இடுவதோடு இல்லை வழி தெளிப்பும் செய்யலாம்.

மாங்கனீசு பற்றாக்குறை

மாங்கனீசு பற்றாக்குறை

அறிகுறிகள்

முக்கிய அறிகுறி: நரம்புகளுக்கு இடையே வெளிர் அல்லது வெள்ளை நிறப் புள்ளிகளுடன் கூடிய மஞ்சள் நிற மாற்றம் செடிகளின் வளர்ச்சி குன்றி, குட்டையான மற்றும் மெலிந்த தண்டுடன் காணப்படலாம். அறிகுறிகள் முதலில் இளம் இலைகளில் தோன்றும். இலைகள் வெளிர் பச்சை நிறமாக மாறி, நரம்புகளுக்கு இடையே மஞ்சள் நிற மாற்றம் ஏற்படும். நரம்புகள் ஒப்பீட்டளவில் பச்சை நிறத்துடனும் தெளிவாகவும் இருக்கும். தட்டுப்பாடு தீவிரமடையும் போது, நரம்புகளுக்கு இடையேயான மஞ்சள் நிறப் பகுதிகளில் சிறிய வெள்ளை அல்லது வெளிர் நிறப் புள்ளிகள் உருவாகும். தட்டுப்பாடு அதிகரிக்கும் போது, இலைத் திசுக்கள் பெருமளவில் வெளிர் மஞ்சள் நிறமாக மாறக்கூடும். சோளக்கதிர்கள் மற்றும் மணிகள் சிறியதாகி விளைச்சல் குறையும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை