தண்டு துளைப்பான்

தண்டு துளைப்பான்

காரண உயிரி

Scirpophaga incertulas

அறிகுறிகள்

காய்ந்த குருத்து: பயிர் வளரும் பருவத்தில், பாதிக்கப்பட்ட தூரின் மையக் குருத்து பழுப்பு நிறமாக மாறி, காய்ந்து இறந்துவிடும். இந்தக் காய்ந்த மையக் குருத்தை அடிப்பகுதியிலிருந்து மிக எளிதாக உருவி எடுத்துவிட முடியும். வெண்கதிர்: பயிரில் கதிர் வரும் பருவத்தில், கதிர் வெண்மையாக மாறி விடும். மேலும் இதில் நெல் மணிகள் இல்லாமல் பதராக இருக்கும். புழு உள்ளே நுழைந்த தண்டு அல்லது தூரின் மீது சிறிய துளைகள் காணப்படலாம். பாதிக்கப்பட்ட தண்டை பிளந்து பார்த்தால், உள்ளே ஒரு புழு, அது தின்று குடைந்த பாதை அல்லது புழுவின் எச்சம் சேர்ந்திருப்பதைக் காண முடியும். பூச்சிகளின் தீவிரமான தாக்குதல், பலன் தரும் தூர்களின் (கதிர் வரும் தூர்கள்) எண்ணிக்கையைக் குறைத்து பயிருக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

விளக்கம்

Stem borer variants: Yellow stem borer — Scirpophaga incertulas White stem borer — Scirpophaga innotata Striped stem borer — Chilo suppressalis Gold-fringed stem borer — Chilo auricilius Dark-headed striped stem borer — Chilo polychrysus Pink stem borer — Sesamia inferens

பரிந்துரைகள் (8)
கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50% (SP)
குளோரந்த்ரனிலிப்ரோல் 18.5% (SC)
ஃப்ளூபென்டியமைடு 20% (WG)
இண்டோக்சாகார்ப் 10% + தயோமெதாக்சம் 10% (WG)
ஃப்ளூபென்டியமைடு 00.70% (GR)
குளோரந்த்ரனிலிப்ரோல் 00.40% (GR)
குளோரந்த்ரனிலிப்ரோல் 0.35% + பிப்ரோனில் 0.35% (CG)
குளோரந்த்ரனிலிப்ரோல் + பிப்ரோனில் 0.35 + 0.35% (GR)

இலை சுருட்டுப் புழு

இலை சுருட்டுப் புழு

காரண உயிரி

Cnaphalocrocis medinalis

அறிகுறிகள்

புழுக்கள் இலைகளை நீளவாக்கில் மடித்து, அவற்றின் ஓரங்களை பட்டுப் போன்ற நூலால் இணைத்து ஒட்டிவிடும். இவ்வாறு மடிக்கப்பட்ட இலை ஒரு குழாய் போன்ற உறை போல மாறிவிடும்; அதற்குள் புழு தங்கியிருந்து இலையை உண்ணும். புழுக்கள் இலையின் பச்சையத்தை (பச்சை நிறப் பகுதிகளை) சுரண்டி உண்பதால், இலை நரம்புகளுக்கு இணையாக நீளமான, வெண்மையான அல்லது ஒளி ஊடுருவக்கூடிய கோடுகள் போன்ற தழும்புகள் ஏற்படும். பாதிக்கப்பட்ட இலைகள் சுரண்டப்பட்டோ, நிறம் மங்கி வெளிறியோ அல்லது காகிதம் போலவோ காணப்படும். மடிக்கப்பட்ட இலையின் உள்ளே புழுவின் எச்சம் காணப்படலாம். பூச்சிகளின் தீவிர தாக்குதல் ஏற்படும் போது, அதிக எண்ணிக்கையிலான இலைகள் மடிக்கப்பட்டு நெற்பயிரே தீய்ந்து போனது போல் (கருகியது போல்) தோற்றமளிக்கும். பாதிப்பைக் கண்டறியும் முக்கிய அறிகுறி: உள்ளே புழுவுடன் மடிக்கப்பட்ட இலை மற்றும் அதோடு சேர்ந்து நீளவாக்கில் காணப்படும் ஒளி ஊடுருவக்கூடிய கோடுகள் ஆகியவை 'இலைச்சுருட்டுப் புழுவின்'பாதிப்பை உறுதியாகச் சுட்டிக்காட்டுகின்றன.

பரிந்துரைகள் (3)
குளோர்பைரிபாஸ் 50% + சைபர்மெத்ரின் 5% (EC)
இமாமெக்டின் பென்சோயேட் 05% (SG)
அசிபேட் 50% + இமிடாகுளோப்ரிட் 1.80% (SP)

ஆனைக் கொம்பன் ஈ

ஆனைக் கொம்பன் ஈ

காரண உயிரி

Orseolia oryzae

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட தூரின் வளரும் குருத்துப் பகுதி வெற்றிடமான குழாய் போல், வெள்ளி போன்ற வெண்மை நிறத்திலான ஒரு அமைப்பாக மாறும். இந்த அமைப்பு வெங்காய இலை போன்ற தோற்றத்தில் நீண்டு வளரும்; இது பொதுவாக "வெள்ளிக் குருத்து" அல்லது "வெங்காய இலை அறிகுறி" என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட தூரில் இயல்பான இலைகள் வளராது மற்றும் அதிலிருந்து நெற்கதிர்கள் வெளிவராது. இலைகள் உருமாறியோ, சுருண்டோ அல்லது வாடியோ காணப்படலாம். பாதிக்கப்பட்ட பயிர்களின் வளர்ச்சி குன்றி காணப்படும். பாதிப்பைக் கண்டறியும் முக்கிய அறிகுறி: தனித்துவமான வெள்ளிக் குருத்து தோன்றுவதே வயலில் காணக்கூடிய மிக முக்கியமான அறிகுறியாகும். தண்டு துளைப்பான் தாக்குதலால் ஏற்படும் 'காய்ந்த குருத்து' அல்லது 'வெண்கதிர்' பாதிப்புகளிலிருந்து இது வேறுபட்டது; ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலில், இயல்பான குருத்து வளர்வதற்குப் பதிலாக, தெளிவாகப் பார்க்கக் கூடிய குழாய் போன்ற அமைப்பு உருவாகும்.

பரிந்துரைகள் (3)
தயோமெதாக்சம் 75% (WG)
கார்போசல்ஃபான் 25% (EC)
லாம்டா-சைகலோத்ரின் 05% (EC)

புகையான்

புகையான்

காரண உயிரி

Nilaparvata lugens

அறிகுறிகள்

இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் நெற்பயிரின் கீழ்ப்பகுதியிலிருந்து, குறிப்பாக தூர்களின் அடிப்பகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. ஆரம்பத்தில், இலைகள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறும். தாக்குதல் அதிகரிக்கும் போது, பாதிக்கப்பட்ட பயிர்கள் பழுப்பு நிறமாக மாறி, காய்ந்து இறந்துவிடும். இதனால் வயலில் ஆங்காங்கே திட்டுத்திட்டாகப் பயிர்கள் கருகிக் காணப்படும், இது 'புகையான் கருகல்' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற இனிப்பான கழிவுப் பொருளால், பாதிக்கப்பட்ட பயிர்களின் அடிப்பகுதியில் கருப்பு நிறப் பூஞ்சை உருவாவதற்கு வழிவகுக்கும். பூச்சிகளின் கடுமையான தாக்குதலால் வயலில் பெருமளவில் நெற்பயிர்கள் கருகி, பெரிய திட்டுக்களாக இறந்துபோகக் கூடும். பழுப்புத் தத்துப்பூச்சிகள் நெற்பயிரில் 'ராக்ட் ஸ்டண்ட்' மற்றும் 'கிராஸி ஸ்டண்ட்' போன்ற வைரஸ் நோய்களைப் பரப்புவதால், பயிர்களில் கூடுதல் நோய்கள் பயிரைப் பாதிக்க வாய்ப்புகள் அதிகரிக்கும். பாதிப்பைக் கண்டறியும் முக்கிய அறிகுறி: பயிரின் அடிப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தத்துப்பூச்சிகள் காணப்படுகின்றனவா என்பதையும், பயிர் மஞ்சளாகி காய்ந்து போவதோடு சேர்த்து தேன் போன்ற கழிவு மற்றும் கரும்பூஞ்சை ஆகியவை உள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும். 'புகையான் கருகல்' அறிகுறியானது, நெல் கருப்பு நாவாய்ப்பூச்சியால் ஏற்படும் பாதிப்பைப் போன்றே தோற்றமளிக்கலாம்.

பரிந்துரைகள் (7)
தயோமெதாக்சம் 75% (WG)
குளோதியானிடின 50% (WDG)
டைனோடெஃபுரான் 20% (SG)
பைமெட்ரோசின் 50% (WG)
நிட்டென்பைராம் 25% (SP)
டைனோடெஃபுரான் 11% + பைமெட்ரோசின் 36% (WG)
டைனோடெஃபுரான் 12% + தயோமெதாக்சம் 22.5% + பைமெட்ரோசின் 30% (WG)

அதிகமான பாதிப்பிற்கு

இலைப் பேன்

இலைப் பேன்

காரண உயிரி

Stenchaetothrips biformis

அறிகுறிகள்

இளம் இலைகளின் மென்மையான திசுக்களை இந்தப் பூச்சிகள் உண்பதால், இலைகளில் வெள்ளி நிறக் கோடுகள் மற்றும் மஞ்சள் நிறத் திட்டுக்கள் உருவாகும். இலைகளின் ஓரங்கள் நடுநரம்பை நோக்கி உட்புறமாகச் சுருண்டு காணப்படும். இலையின் உட்புறத் திசுக்கள் அழிக்கப்பட்ட பின்னும் அதன் வெளிப்புறத் தோல் அப்படியே தங்கிவிடுவதால், சேதமடைந்த பகுதிகள் ஒளி ஊடுருவக்கூடிய வகையில் மாறக்கூடும். பூச்சிகளின் தீவிர தாக்குதலின் போது, இலைகளின் நுனிப்பகுதி வாடிக் காய்ந்து போகலாம். கடுமையாக பாதிக்கப்பட்ட நாற்றுகளின் வளர்ச்சி குன்றிக் காணப்படும். பயிரின் கதிர் வரும் பருவத்தில் ஏற்படும் தீவிரமான தாக்குதலால், நெல் மணிகள் பதராக மாறக்கூடும். பாதிப்பைக் கண்டறியும் முக்கிய அறிகுறி: சுருண்ட இலைகளின் உள்ளே சிறிய மஞ்சள் நிற இளம் பூச்சிகள் மற்றும் அடர்-பழுப்பு நிற முதிர்ந்த பூச்சிகள் உள்ளனவா எனப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வறட்சியின் காரணமாகவும் இலைகள் சுருளக்கூடும், ஆனால் வறட்சியின் போது இலைப்பேன் தாக்குதலால் ஏற்படும் தனித்துவமான கோடுகள் போன்ற சேதங்கள் காணப்படாது.

பரிந்துரைகள் (1)
தயோமெதாக்சம் 75% (WG)

பச்சைத் தத்துப் பூச்சி

பச்சைத் தத்துப் பூச்சி

காரண உயிரி

Nephotettix virescens

அறிகுறிகள்

இளம்பூச்சிகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் ஆகிய இரண்டுமே இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. பூச்சிகள் உண்பதால் ஏற்படும் சேதம் பயிரின் வீரியத்தைக் குறைத்து, பயிரின் வளர்ச்சி குன்றுவதற்குக் காரணமாகலாம். பாதிக்கப்பட்ட பயிர்களில் பலன் தரும் (கதிர் வரும்) தூர்களின் எண்ணிக்கை குறையக்கூடும், மேலும் நாளடைவில் பயிர் வாடி அல்லது முழுமையாகக் காய்ந்து விடலாம். நெல் துங்ரோ வைரஸ் மற்றும் பிற அறியப்பட்ட வைரஸ் நோய்களைப் பரப்புவதே மற்றொரு முக்கியமான பாதிப்பாகும். துங்ரோ நோயால் பாதிக்கப்பட்ட பயிர்கள், நோயின் தாக்கம் மற்றும் பயிரின் வளர்ச்சிப் பருவத்தைப் பொறுத்து மஞ்சள் அல்லது மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாக மாறியும், வளர்ச்சி குன்றியும் காணப்படலாம். பாதிப்பைக் கண்டறியும் முக்கிய அறிகுறி: பூச்சிகள் சாறு உறிஞ்சுவதால் ஏற்படும் நேரடி சேதத்தை மட்டும் வைத்து பச்சைத் தத்துப் பூச்சிச்சியை உறுதி செய்ய முடியாது. முடியாது. பச்சைத் தத்துப்பூச்சிகள் உள்ளனவா என்று தேடிப் பார்ப்பதோடு, வைரஸ் நோய்த்தொற்றுக்கான தனித்துவமான அறிகுறிகள் பயிரில் உள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

முள் வண்டு

முள் வண்டு

காரண உயிரி

Dicladispa armigera

அறிகுறிகள்

முதிர்ந்த வண்டுகள் இலையின் மேற்பரப்பைச் சுரண்டி உண்பதால், இலையின் கீழ்ப்புறத் தோல் மட்டும் பாதிக்கப்படாமல் அப்படியே தங்கிவிடும். சேதமடைந்த பகுதிகளில், நடுநரம்பு மற்றும் இலை நரம்புகளுக்கு இணையாக நீளமான, வெண்மை நிறக் கோடுகள் காணப்படும். வண்டுகள் இலையின் திசுக்களுக்குள் குடைந்து செல்வதால், சீரற்ற, ஒளி ஊடுருவக்கூடிய வெள்ளை நிறத் திட்டுக்கள் உருவாகும். சேதமடைந்த இலைகள் வெண்மையாகவும், மெல்லிய சவ்வு போலவும் மாறிவிடும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலைகள் வாடிவிடும், மேலும் தொலைவிலிருந்து பார்க்கும் போது பயிரே தீய்ந்து கருகியது போல் தோற்றமளிக்கும். பாதிப்பைக் கண்டறியும் முக்கிய அறிகுறி: இலையின் மேற்பரப்பில் சுரண்டப்பட்ட நீளமான வெள்ளை நிறக் கோடுகள் மற்றும் வண்டுகள் குடைவதால் ஏற்படும் ஒளி ஊடுருவக்கூடிய திட்டுக்கள் ஆகிய இரண்டும் சேர்ந்திருப்பதே இதன் தனித்துவமான அறிகுறியாகும். சிறிய, முட்கள் கொண்ட வண்டுகள் (முள்வண்டு) அல்லது அதன் இளம் வண்டுகள் இலைகளில் உள்ளனவா என்று தேடிப் பார்த்து இதனை உறுதி செய்து கொள்ளவும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

நெல் கூண்டுப் புழு

நெல் கூண்டுப் புழு

காரண உயிரி

Nymphula depunctalis

அறிகுறிகள்

புழுக்கள் இலைகளின் நுனிகளையோ அல்லது இலையின் சில பகுதிகளையோ கத்தரிக்கோலால் வெட்டியது போல் செங்கோணத்தில் (நேராக) வெட்டிவிடும். புழு தான் வெட்டிய இலையின் பகுதியைப் பயன்படுத்தி, தனக்குப் பாதுகாப்பான ஒரு உறையை (குழாய் போன்ற கூடு) உருவாக்கிக் கொள்ளும். இந்த இலைக் கூடுகள் வயலில் தேங்கியுள்ள நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருப்பதையோ அல்லது இலையின் அடிப்பகுதியுடன் (leaf sheath) ஒட்டியிருப்பதையோ காண முடியும். புழுக்கள் இலையின் பச்சையத்தைத் தின்பதால், இலைகள் காகிதம் போன்ற வெளிறிய தோற்றத்தைப் பெறும். சேதமடைந்த இலைகளில் மீதமுள்ள திசுக்கள் மற்றும் நரம்புகள் ஏணி போன்ற அமைப்பில் காணப்படும். கடுமையான அளவில் இலைகள் சேதமடைவதால், பயிரின் வளர்ச்சி குன்றி அருவடை செய்வது தாமதமாகலாம். பாதிப்பைக் கண்டறியும் முக்கிய அறிகுறி: கத்தரிக்கோலால் வெட்டியது போல் செங்கோணத்தில் வெட்டப்பட்ட இலைகள், ஏணி போன்ற இலை நரம்புகளின் அமைப்பு மற்றும் வயலில் தேங்கியுள்ள நீரின் மேற்பரப்பில் மிதக்கும் இலைக் கூடுகள் ஆகியவையே இந்தப் பாதிப்பை அடையாளம் காண உதவும் மிக முக்கியமான அம்சங்களாகும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

நெல் ஸ்கிப்பர்

நெல் ஸ்கிப்பர்

காரண உயிரி

Pelopidas mathias

அறிகுறிகள்

புழுக்கள் இலைகளைத் தின்று, இலையின் திசுப் பகுதிகளை அழித்துவிடும். இவை இலைகளின் ஓரங்களை உண்டு, படிப்படியாக இலையின் பெரும்பகுதியை அழித்துவிடும், சில நேரங்களில் நடுநரம்பு மட்டுமே எஞ்சியிருக்கும். இலைகளின் நுனிகள் கீழ்நோக்கி சுருண்டிருக்கும் அல்லது இலையின் இரண்டு ஓரங்களும் ஒன்றாக மடிந்திருக்கும். அருகருகே உள்ள இரண்டு இலைகள் பட்டுப் போன்ற நூல்களால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு, புழுக்களுக்குப் பாதுகாப்பான உறை போன்ற அறையாக மாறும். பகல் நேரங்களில் புழுக்கள் இந்த மடிக்கப்பட்ட இலைகளுக்குள் பாதுகாப்பாக மறைந்திருக்கும். பாதிப்பைக் கண்டறியும் முக்கிய அறிகுறி: பட்டு நூலால் பிணைக்கப்பட்டு சுருண்ட அல்லது மடிக்கப்பட்ட இலைகள் மற்றும் அதனுள் பாதுகாப்பாகத் தங்கியிருக்கும் புழுக்கள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும். வயலில் உள்ள இயற்கை எதிரிப் பூச்சிகள் இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால், இவை பொதுவாக பயிர்களுக்குச் சிறிய அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும். அறிகுறி இல்லை சுருட்டுப் புழுத் தாக்குதலை போல் காணப் படலாம்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

நெல் கதிர் நாவாய்ப் பூச்சி

நெல் கதிர் நாவாய்ப் பூச்சி

காரண உயிரி

Leptocorisa acuta

அறிகுறிகள்

இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள், கதிர் வெளிவரும் பருவத்திலிருந்து நெல் மணி பால் பிடிக்கும் பருவம் வரை, வளரும் நெல் மணிகளில் உள்ள பாலை உறிஞ்சுகின்றன. இதனால் நெல் மணிகள் சரியாகப் பால் பிடிக்காமலும், சுருங்கியும் அல்லது பதராகவும் மாறிவிடும். சேதமடைந்த நெல் மணிகள் உருமாறியோ, நிறம் மாறியோ அல்லது அவற்றின் மீது புள்ளிகள் தோன்றியோ காணப்படும். நெல் மணிகள் முறையாக வளராததால் (எடை இல்லாமல்), நெற்கதிர்கள் வளைந்து சாயாமல் நேராக நிமிர்ந்து நிற்கும். இந்தப் பூச்சிகளைத் தொந்தரவு செய்தாலோ அல்லது நசுக்கினாலோ ஒருவித கடுமையான துர்நாற்றம் வீசுவதை உணரலாம். பாதிப்பைக் கண்டறியும் முக்கிய அறிகுறி: இலைகளை உண்ணும் பூச்சிகளைப் போலல்லாமல், கதிர் நாவாய்ப்பூச்சிகள் முக்கியமாக வளர்ந்து வரும் நெல் மணிகளையே சேதப்படுத்துகின்றன. நெற்பயிர் பூக்கும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவங்களில், நெற்கதிர்களின் மீது மெல்லிய, பழுப்பு கலந்த பச்சை நிறப் பூச்சிகள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை