மர வள்ளி மொசைக் வைரஸ்

மர வள்ளி மொசைக் வைரஸ்

காரண உயிரி

cassava mosaic virus

அறிகுறிகள்

இலைகளில் ஒழுங்கற்ற வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிற திட்டுகள் தோன்றும். இளம் இலைகள் அதிகம் பாதிக்கப்படும். இலைகள் சிறுத்து உருமாற்றம் காணப்படும். செடிகளின் வளர்ச்சி குன்றி, கிழங்கு மகசூல் குறையும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

இலைப் புள்ளி/கருகல் நோய்

இலைப் புள்ளி/கருகல் நோய்

காரண உயிரி

Colletotrichum gloeosporioides

அறிகுறிகள்

இலைகள் மற்றும் தண்டுகளில் கருமை நிரப் புள்ளிகள் தோன்றும். பாதிக்கப்பட்ட இலைகள் வாடி, கீழ்நோக்கித் தொங்கும் . வாடிய இலைகள் பின்னர் செடியிலிருந்து உதிர்ந்து விடலாம் . தளிர்கள் கருகுதல் அல்லது நுனியிலிருந்து செடி காய்ந்து கருகல் ஏற்படும் .

பரிந்துரைகள் (4)
கார்பெண்டாசிம் 12% + மான்கோசெப் 63% (WP)
அசோக்சிஸ்ட்ரோபின் 11.5% + மான்கோசெப் 30% (WP)
டெபுகோனசோல் 25% (WG)
அசோக்சிஸ்ட்ரோபின் 18.2% + டைஃபெனோகோனசோல் 11.4% w/w (SC)

பாக்டீரியா இலைக் கருகல்

பாக்டீரியா இலைக் கருகல்

காரண உயிரி

Xanthomonas axonopodis

அறிகுறிகள்

இலைகளின் கீழ்ப்பரப்பில் உள்ள நரம்புகளுக்கு இடையில் சிறிய, கோண வடிவ, பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். நோய் பரவும் நிலையில் இலைகள் பழுப்பு நிறமாக மாறும். புள்ளிகள் ஒன்றிணைந்து இலைக் கருகல் உருவாகும். ​​இலைக்காம்புகள் நேராக இருக்கும் நிலையில், கருகிய இலைகள் கீழ் நோக்கி தொங்கி விடும். தண்டுகள், இலைகள், இலைக்காம்புகளில் பழுப்பு நிறப் பிசின் உருவாகலாம்.

பரிந்துரைகள் (1)
காசுகாமைசின் 3% (SL)

சிறந்த நோய்க் கட்டுப்பாட்டைப் பெற காப்பர் ஆக்சி குளோரைடுடன் கலந்து தெளிக்கவும்.

இலைப் புள்ளி நோய்

இலைப் புள்ளி நோய்

காரண உயிரி

Cercospora henningsii, Cercospora vicosae

அறிகுறிகள்

இலைகளில் சிறிய பழுப்பு நிறத் புள்ளிகள் தோன்றும். இவற்றைச் சுற்றி மஞ்சள் நிற வளையம் காணப்படும். இலைப்புள்ளிகளின் அளவு, வடிவம், நிறம் மற்றும் தோற்றம் ஆகியவை நோயை உண்டாக்கும் உயிரினங்களைப் பொறுத்து மாறுபடும். இலைகளின் இரு பக்கங்களிலும் இப்புள்ளிகள் தோன்றுகின்றன. இலையின் மேல்புறத்தில் அடர் நிற விளிம்புகளுடன் கூடிய பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். இலையின் அடிப்பகுதியில் சாம்பல் நிற மையப்பகுதியையும் தெளிவற்ற விளிம்புகளையும் கொண்ட புள்ளிகள் தோன்றுகின்றன. சில சமயங்களில் மேல்புறத்தில் வெண்மையான புள்ளிகளும் காணப்படலாம். நோய்த்தொற்றுக்குள்ளான இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடுகின்றன.

பரிந்துரைகள் (3)
டெபுகோனசோல் 38.39% w/w (SC)
அசோக்சிஸ்ட்ரோபின் 8.3% + மான்கோசெப் 66.7% (WG)
மெட்டிரம் 70% (WG)

கிழங்கு அழுகல் நோய்

கிழங்கு அழுகல் நோய்

காரண உயிரி

Macrophomina phaseolina, Botryodiplodia theobromae, Fusarium spp.

அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் இலைகள் பழுப்பு நிறமாக மாறி வாடிப் போகும். இலைகள் செடியிலேயே ஒட்டிக்கொண்டிருக்கலாம் அல்லது கீழே உதிர்ந்து விழலாம். பாதிக்கப்பட்ட செடி கருகியது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும். கிழங்குகளில் வெளிர் பழுப்பு, அடர் சாம்பல், நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிற மாற்றங்கள் காணப்படலாம். அழுகிய வேர்கள் மென்மையாக மாறி, துர்நாற்றத்தை வீசக்கூடும். சில சமயங்களில், குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில், தண்டுப் பகுதியில் பூஞ்சையின் வெண்மையான வளர்ச்சியைக் காண முடியும்.

பரிந்துரைகள் (2)
கார்பெண்டாசிம் 50% (WP)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதைக் கரணைகளை நனைத்து நடவும். உயிரியல் (பயோ) கட்டுப்பாடு: 2.5 கிலோ *ட்ரைக்கோடெர்மா விரிடி* அல்லது *ட்ரைக்கோடெர்மா ஹார்சியானம்* தயாரிப்பை, நன்கு மக்கிய 100–250 கிலோ தொழு உரம் மற்றும் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் கலக்கவும். இக்கலவையை நிழலில் 7–10 நாட்கள் வரை வைத்துப் பதப்படுத்தி, பின்னர் ஒரு தடுப்பு நடவடிக்கையாக மண்ணில் இடவும். இதனைப் பயன்படுத்திய பிறகு, வேறு ஏதேனும் ரசாயனங்களைப் பயன்படுத்துவதற்கு இடையே குறைந்தது 10 நாட்கள் இடைவெளி விடவும்.

மெட்டலாக்சில் 8% + மேன்கோசெப் 64% (WP)

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட செடி மற்றும் அதைச் சுற்றியுள்ள செடிகளின் வேர்ப்பகுதியில் மண்ணை மருந்துக்கலவையால் நனைக்கவும்.